ஒரு நாள் இரவு புயல் காற்று அடிக்கும் போது நீ கார் ஓட்டிக் கொண்டு சாலை வழியே செல்கிறாய். அப்பொழுது பேருந்து நிறுத்துமிடத்தில் மூவர் பேருந்துக்காக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறாய். 1. இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு வயதான மூதாட்டி. 2. ஒரு சமயம் உன் உயிரைக் காப்பாற்றிய உன் பழைய நண்பன் 3. வெகு நாட்களாக நீ சந்திக்க நினைத்த உன் காதலி ஒருவரைத்தான் உன் காரில் ஏற்றமுடியும் என்ற நிலையில் யாரை நீ உன்னுடன் அழைத்துச் செல்வாய்..? யோசித்து உன் பதிலைச் சொல்லு.. இந்தக் கேள்வியானது ஒரு நேர்முகத் தேர்வில் பயன் படுத்தப் பட்டதாம். இறக்கும் தறுவாயில் இருக்கும் அந்த வயதான மூதாட்டியை நீ ஏற்றிக் கொள்ளலாம்.. read more
ஏனெனில் அவளை முதலில் காப்பாற்ற வேண்டியது உன் மனிதாபிமானத்தைக் காட்டுவதுடன் உன் கடமையுணர்ச்சியையும் புலப்படுத்தும்.
ஆகவே நீ அவளைத்தான் முதலில் காப்பாற்ற வேண்டும் அல்லது
முன்பு ஒரு நாள் உன் உயிரைக் காப்பாற்றினானே உன் நண்பன்…
அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவனை உன்னுடன் அழைத்துச் செல்லலாம்.
இப்படிச் செய்தால் வெகு நாட்களாக நீ பார்க்க நினைத்த உன் காதலியை சந்திக்கும் வாய்ப்பை இழப்பாய்.
நீ என்ன செய்வாய்..?
தரணி பதில் இது:
என் காரின் சாவியை என் பழைய நண்பனிடம் கொடுத்து இறக்கும் தறுவாயில் இருக்கும் அந்த வயதான மூதாட்டியை மருத்துவ மனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்வேன்.
நானும் வெகு நாட்களாக சந்திக்க நினைத்த என் காதலியுடன் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருப்பேன்.
உங்கள் பதில் என்னவோ?
இனிய இரவு வணக்கம்
 

 
 
No comments:
Post a Comment